வலங்கைமான் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ 42 லட்சம் கொடுத்து ஏமாந்தவர் தூக்கிட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்.. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 June 2026

வலங்கைமான் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ 42 லட்சம் கொடுத்து ஏமாந்தவர் தூக்கிட்டு தற்கொலை உறவினர்கள் சாலை மறியல்..

 


திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன் இவர் வலங்கைமான் பகுதி முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது உறவினர் என சொல்லிகொண்டு பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இதை நம்பி பலர் ஏமாந்து பணத்தை கொடுத்துள்ளனர். இந்நிலையில் வலங்கைமான் வட்டத்திற்கு உட்பட்ட வேலங்குடி பகுதியைச் சேர்ந்த திவாகர் என்கிற அண்ணாமலை. இவர் தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ 42 லட்சம் பணத்தை ரமேஷ்கிருஷ்ணனிடம் தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துள்ளார். இவர் மட்டுமில்லாமல் வலங்கைமான் உட்பட்ட பகுதியில் பலரிடம் சுமார் ரூ 4 கோடிக்கு மேல் பெற்றுக்கொண்டு போலியான நியமன ஆணைகளை ரமேஷ்கிருஷ்ணன் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நேரடியாக பணம் கொடுத்த 20-க்கும் மேற்பட்டோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சென்று பணி நியமன ஆணைகளை காண்பித்து பணி ஆணை கிடைத்தும் இதுவரை அரசு பணி வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர் .அப்போது தலைமைச் செயலகத்தில் இது போலியான பணி நியமன ஆணை என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் வலங்கைமானில் உள்ள காவல் நிலையம் , மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் அரசு பணி வாங்கி தருவதாக வலங்கைமான் அருகே குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன் ஏமாற்றியுள்ளதாக புகார் மனு அளித்துள்ளனர். புகார் மனு குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் அண்ணாமலை. ரூ 42 லட்சம் கொடுத்து ஏமாந்து விட்டதாக கூறி வீட்டில் யாரும் இல்லாத போது கயிற்றினால் தூக்கிட்டு உயிரிழந்தார். இவரது மனைவி பிரியங்கா மற்றும் இருண்டு பெண் குழந்தைகளுடன் வெளியில் சென்று வீடு திரும்பிய போது கணவர் வீட்டில் பிணமாக தொங்கியுள்ளார்.இதனை பார்த்து பிரியங்கா கதறி அழுதுள்ளார் . சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 



இச்சம்பவம் குறித்து வலங்கைமான் போலிசார் வழக்கு பதிவு செய்து அண்ணாமலை உடலை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அண்ணாமலை உள்ளிட்ட பலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி தலைமறைவாக வலங்கைமான் அருகே குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன் என்ற நபரை கைது செய்ய வலியுறுத்தி மன்னார்குடி , நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியான ரமேஷ்கிருஷ்ணன் என்பவரை விரைவில் கைது செய்யபடும் என தெரிவித்தனர்.பின்னர் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டம் கைவிடப் பட்டுள்ளது உயிரிழந்த அண்ணாமலைக்கு மனைவி பிரியங்கா மற்றும் நான்கு வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். மாவட்ட உதவி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ 42 லட்சம் கொடுத்து ஏமாந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad